சனி, 21 மார்ச், 2015

வீட்டுத்தோட்டம் ..எளிய குறிப்புகள்

வீட்டுத்தோட்டம் ..எளிய குறிப்புகள்
முற்றிய தேங்காயை பிளந்து அதில் நாற்று வளர்க்க நார் கழிவு ,உர கம்போஸ்ட் மண் கலந்து சுற்றிலும் கயிற்றால் கட்டி அதில் செடி வளர்த்தல் .
மட்கும் குணமுடையதால் நாற்றுடன் தேங்காய் தொட்டி அமைப்பை நிலத்தில் அப்படியே நடலாம் .
தேங்காய் நார் நீரை தக்க வைக்கும் நீர் ஆவியாதலை தடுக்கும்.
வெயில் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் விடக் கூடாது.
செடியின் அடி பாகத்தில் தேங்காய் மட்டையை அடுக்கி வைத்து தண்ணீர் ஊற்றினால் நிறைய நேரம் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.
இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியே வந்தாலும், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசலைத் தெளித்தால் போய்விடும்.
செடிகள், காய்கறிக் கழிவுகளை செடிகளுக்கு மூடாக்காக போட்டு வைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும் .
தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.