சனி, 21 மார்ச், 2015

வீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..

வீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..
பெரிய நிலப் பரப்பு அல்லது பெரிய தோட்டம் இல்லாவிடினும் சிறிய இடத்திலும் தொட்டிகளில் அல்லது கோணிப்பை /உயர்த்தி கட்டிய மண் படுகைகளில் காரட் செடி வளர்க்கலாம்.
20 " ஆழம் அல்லது அதை விட ஆழமான தொட்டி அல்லது சதுர /செவ்வக வடிவ கலனில்
முக்கால் பாகம் கம்போஸ்ட் உர மண் கலவையினால் நிரப்ப வேண்டும் .
கலப்பு உர மண் கலவை இலகுவாக நெகிழும் தன்மையுடன் இருக்கவேண்டும் .
சிறு கற்கள் போன்றவற்றை தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தனும் ..இல்லையென்றால் ..அறுவடை செய்யும்போது குறை வளர்ச்சி /பல வடிவங்களில் கோணல் மாணலான காரட்கள் கிடைக்கும் ..உதாரணம் கொல்லாஜில் கடைசி படம் ..கல் ஒன்று வேர் கீழ் நோக்கி வளர தடை செய்ததால் அதன் வடிவம் பாருங்கள் smile emoticon
தொட்டியில் நிரப்பிய கம்போஸ்ட் மீது சிறிதளவு காரட் விதைகளை பெரிய கண் சல்லடை மீது வைத்து தூவலாம் காரட் விதை மிக சிறியவை .விதைகளுக்கிடையில் இடைவெளி மிக அவசியம் .
இதற்க்கு ஒரு கைப்பிடி மணலுடன் விதைகளை கலந்தும் தூவலாம் .இது அதிகப்படியான நீர் தொட்டியில் தேங்காமலிருக்க உதவும்.
பிறகு விதைகள் மீது சிறிது கம்போஸ்டால் மூட வேண்டும் .
நீர் மிக மெதுவா தெளிப்பானால் தெளிக்கணும் .தொட்டி கீழ் செங்கல் வைக்க வேண்டும் நீர் தேங்காமல் எளிதில் வெளியேற இது உதவும்
காரட் செடி விதைகள் துளிர்க்க இரண்டு வாரங்களாகும் ..இடைவெளி இல்லாமல் முளைத்த சிறு நாற்று செடிகளை மெதுவா கத்திரித்து விடணும் .பிடுங்க கூடாது .
காலநிலை தட்ப வெப்பம் பொருத்து விளைச்சல் இருக்கும் .60இலிருந்து 75 நாட்களில் அறுவடை செய்யலாம் .
காரட் கீரையை வீணாக்காதீங்க வெஜிடபிள் சூப் செய்யும்போதும் ,காரட் பொரியலிலும் சேர்த்து சமைக்கலாம் .