வியாழன், 24 ஜூலை, 2014

வீட்டுத் தோட்டம் டிப்ஸ்


வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 
----------------------------------------------


தொங்கும் தோட்டம் முறை

இடப்பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க முடிவதில்லை. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது பழமொழி. அந்த வகையில் இப்போது அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது ‘தலைகீழ்’ (Topsy Turvy) வளர்ப்பு முறை. பொதுவாக ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளி வளர்ப்பதை இந்த முறையில் சிறப்பாக வளர்த்து வருகின்றனர்.

நாற்றுகளை அதற்கென வடிவமைக்கப்பட்ட பைகளில் தலைகீழாக - அதாவது, வேர்களை மேலும் தண்டுப்பகுதியை கீழ் நோக்கி இருக்குமாறு நட்டு, அதனை தொங்கவிட்டு அறுவடை செய்கின்றனர். நாமும் இந்த முறையில் குறைந்த செலவில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டே வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது...

தொட்டியின் எடை அதிகரிக்காமலிருக்க சிறுசிறு குச்சிகள், காய்ந்த இலைகள், தென்னைநார் கழிவு, மண்புழு உரம், மிகமிக குறைந்த அளவில் மண் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.

பழைய பெயின்ட் வாளியில் பக்கவாட்டில் துளையிட்டு நாற்றுகளை உட்செலுத்தி குறிப்பாக தக்காளி, மிளகாய், பாலக் கீரை, புதினா போன்றவற்றை இந்த முறையில் எளிதாக வளர்க்கலாம். தொங்கும் முறையில் வளர்ப்பதால் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து செடிகள் காப்பாற்றப்படும். பார்வைக்கு மேலிருப்பதால் இலைகளின் கீழ் முட்டையிடும் பூச்சி களையும் எளிதாக கண்டுகொள்ள முடியும்.

அழகுத் தாவரங்களை இந்த முறையில் வளர்ப்பதால் இடப் பற்றாக்குறையை சமாளிப்பதோடு வீட்டின் தோற்றத்தையும் கலைநயத்துடன் மாற்றலாம்! -

வீட்டுத் தோட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள