வியாழன், 24 ஜூலை, 2014

மிகவும் பயனுள்ள பதிவரின் Blog

மிகவும் பயனுள்ள பதிவரின் Blog

http://maravalam.blogspot.in/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

வீட்டுத் தோட்டம் டிப்ஸ்


வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 
----------------------------------------------


தொங்கும் தோட்டம் முறை

இடப்பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க முடிவதில்லை. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது பழமொழி. அந்த வகையில் இப்போது அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது ‘தலைகீழ்’ (Topsy Turvy) வளர்ப்பு முறை. பொதுவாக ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளி வளர்ப்பதை இந்த முறையில் சிறப்பாக வளர்த்து வருகின்றனர்.

நாற்றுகளை அதற்கென வடிவமைக்கப்பட்ட பைகளில் தலைகீழாக - அதாவது, வேர்களை மேலும் தண்டுப்பகுதியை கீழ் நோக்கி இருக்குமாறு நட்டு, அதனை தொங்கவிட்டு அறுவடை செய்கின்றனர். நாமும் இந்த முறையில் குறைந்த செலவில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டே வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது...

தொட்டியின் எடை அதிகரிக்காமலிருக்க சிறுசிறு குச்சிகள், காய்ந்த இலைகள், தென்னைநார் கழிவு, மண்புழு உரம், மிகமிக குறைந்த அளவில் மண் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.

பழைய பெயின்ட் வாளியில் பக்கவாட்டில் துளையிட்டு நாற்றுகளை உட்செலுத்தி குறிப்பாக தக்காளி, மிளகாய், பாலக் கீரை, புதினா போன்றவற்றை இந்த முறையில் எளிதாக வளர்க்கலாம். தொங்கும் முறையில் வளர்ப்பதால் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து செடிகள் காப்பாற்றப்படும். பார்வைக்கு மேலிருப்பதால் இலைகளின் கீழ் முட்டையிடும் பூச்சி களையும் எளிதாக கண்டுகொள்ள முடியும்.

அழகுத் தாவரங்களை இந்த முறையில் வளர்ப்பதால் இடப் பற்றாக்குறையை சமாளிப்பதோடு வீட்டின் தோற்றத்தையும் கலைநயத்துடன் மாற்றலாம்! -

வீட்டுத் தோட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள 

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் வாழ்க்கைச்சுழற்சி

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் வாழ்க்கைச்சுழற்சி  

இறுதியில் நமது உணவு மேசைக்கே வருகின்றது 
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் .தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தினாலும் முறையாய் 
மீள் சுழற்சி செய்ய முயலுங்கள் .

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நாம் தூக்கி எறியும் குப்பைகளின் மதிப்பு 
-------------------------------------------------------------------

தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்

பிளாஸ்டிக்கில் 'கடக்' பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.

நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.

சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.

பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.

தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.

பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.

பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.

அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.

அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.

தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.

வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.

ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.

குப்பைகளை தெருவில் போடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது...தவிர்ப்போம் !
எளிமையான, சிறந்த செயல் இதை விட வேறென்ன...!

SAY NO TO PLASTICS
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் வாழ்க்கைச்சுழற்சி  

இறுதியில் நமது உணவு மேசைக்கே வருகின்றது 
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் .தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தினாலும் முறையாய் 
மீள் சுழற்சி செய்ய முயலுங்கள் .
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 30
---------------------------------------
அருமையான நீர் சேமிப்பு ஐடியா

நடுகிற நாற்றுக்கு அருகிலே , அந்த நாற்றின் வேருக்கு அருகில் வருகிற மாதிரி ஒரு இன்ச் பைப் , ஒரு அரை அடி ஆழத்திற்கு பதித்து கொள்ள வேண்டியது..பூமிக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு பைப் இருக்கட்டும்..அதற்கு மேலே 2 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை நிரப்பி , அதன் மூடியிலே ஒரு சிறு துளையிட்டு அதன் வழியாக சொட்டு,சொட்டாக நீர் வடிகிற மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டியது..இப்படி வடிகிற தண்ணீர் அந்த ஓஸ் பைப்பின் வழியாக மண்ணிற்குள் சென்று வேர்ப்பகுதியில் நீர்க்கசிவு இருந்து கொண்டே இருப்பது போல செய்யும்... சுமார் நான்கு நாட்களுக்கு ஒருமுறை இந்த பாட்டிலை நிரப்பினால் போதும்...வாரத்திற்கு இரண்டு முறை....மாதத்திற்கே 16 லிட்டர் தண்ணீர்,அதாவது ஒரு குடம் தண்ணீர் இருந்தால் போதும்.. எவ்வளவு சிக்கனம் பாருங்கள்...

பாட்டில் கீழே விழுந்து விடாமல் இருக்க , அதன் அருகே ஒரு குச்சியை நட்டு அதில் அந்த கேனை கட்டிவிட வேண்டும்...
இதைச்சுற்றி மரக்கூண்டினை வைத்து விட்டால் போதும்...பாதுகாப்பாக நட்டுவைத்த அத்தனை நாற்றுக்களுமே வளர்ந்துவிடும்...

இணைக்கப்பட்ட இந்த படம்இதை இன்னமும் எளிதாக சொல்லும்...

என்ன, இனி இந்த எளிய வழியை பின்பற்றலாம்தானே..???

மரம் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.. கோடையில் மரங்களை காப்பாற்ற வெகுவாய் உதவும்...

"மேலே
சிரம்
வைத்தவனெல்லாம்
மனிதனில்லை.
கீழே
மரம்
வைத்தவனே
மனிதன்"...

தொங்கும் தோட்டம் முறை

இடப்பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க முடிவதில்லை. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது பழமொழி. அந்த வகையில் இப்போது அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது ‘தலைகீழ்’ (Topsy Turvy) வளர்ப்பு முறை. பொதுவாக ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளி வளர்ப்பதை இந்த முறையில் சிறப்பாக வளர்த்து வருகின்றனர்.

நாற்றுகளை அதற்கென வடிவமைக்கப்பட்ட பைகளில் தலைகீழாக - அதாவது, வேர்களை மேலும் தண்டுப்பகுதியை கீழ் நோக்கி இருக்குமாறு நட்டு, அதனை தொங்கவிட்டு அறுவடை செய்கின்றனர். நாமும் இந்த முறையில் குறைந்த செலவில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டே வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது...

தொட்டியின் எடை அதிகரிக்காமலிருக்க சிறுசிறு குச்சிகள், காய்ந்த இலைகள், தென்னைநார் கழிவு, மண்புழு உரம், மிகமிக குறைந்த அளவில் மண் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.

பழைய பெயின்ட் வாளியில் பக்கவாட்டில் துளையிட்டு நாற்றுகளை உட்செலுத்தி குறிப்பாக தக்காளி, மிளகாய், பாலக் கீரை, புதினா போன்றவற்றை இந்த முறையில் எளிதாக வளர்க்கலாம். தொங்கும் முறையில் வளர்ப்பதால் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து செடிகள் காப்பாற்றப்படும். பார்வைக்கு மேலிருப்பதால் இலைகளின் கீழ் முட்டையிடும் பூச்சி களையும் எளிதாக கண்டுகொள்ள முடியும்.

அழகுத் தாவரங்களை இந்த முறையில் வளர்ப்பதால் இடப் பற்றாக்குறையை சமாளிப்பதோடு வீட்டின் தோற்றத்தையும் கலைநயத்துடன் மாற்றலாம்! -

வீட்டுத் தோட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள 


பிளாஸ்டிக் ஒழிப்போம் என்று வலியுறுத்தினாலும்,
நாம் ஒவ்வொருத்தரும் பின்பற்றனும். வெளியில்
எங்கே சென்றாலும், சின்னதாக ஒரு துணிபை
கண்டிப்பாக வைத்து இருக்கவேண்டும் .

முடியாதது எதுவும் இல்லை, முயன்று தான்
பார்ப்போமே !

ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு இருக்கு !

பிளாஸ்டிக் மிக மோசமான நிலைக்கு உலகத்தை
கொண்டு செல்கிறது . விழிப்புணர்வு 0%.

எப்பொழுது மீள போகிறோம் !
இந்த கோடைக் காலத்தில் பறவைகளுக்கு ஆகார ஊட்டிகளையும், வெப்பம் தீர குளிப்பதற்கு வேண்டி குளியல் தொட்டிகளையும் நம் வீட்டின் வெளியே அமைப்பது மிகச் சிறந்தது.பறவைக் கூடுகள், பறவை ஆகார ஊட்டிகள், பறவை குளியல் தொட்டிகள் பல அழகழகான வண்ணங்களில், விதவிதமான மாதிரிகளில் கிடைக்கின்றன. மிகவும் ‘பளிச்’ நிறத்தில் வேண்டாம். இயற்கையுடன் ஒத்துப் போகும் வண்ணத்தில் வாங்கி வீட்டைச் சுற்றி அமையுங்கள்
Bio pore absorbing Hole /மழை நீர் சேமிக்க மற்றும் இயற்கை உரம் இரண்டிற்கும் ஒரு எளிய வழிமுறை 

நீரின்றி அமையாது இவ்வுலகு வானம் மும்மாரி பொழிந்தாலும் கட்டுகடங்காமல் நீர்நிலைகள் 
நிரம்பி எல்லாமே கடலை நோக்கி சென்றடைகின்றன ..

இப்படி வீணாக கடல் கலக்கும் நீரை சேமிக்க நமது வளங்களுக்கு பயன்படுத்த ஒரு எளிய முறையை
இந்தோனேஷியாவில் .Dr. Kamir Pariadin Broto, என்பவர் கண்டுபிடித்திருக்கிறார் .

1, நீரானது நிலத்தை சென்றடையாதவாறு பெரும்பாலும் கான்க்ரீட் தளத்தால் மூடிவைக்கிறோம் (

கட்டிடம் எழுப்பும்போது கொஞ்சமேனும் கருணை வைத்து சில பகுதிகளை நீர் பூமியை அடைய ஒதுக்கி வைங்க .

மழை நீர் நிலத்தின் மேற்பரப்பில் விழும்போது உடனே நிலமானது அதனை உறிஞ்சாது அதற்கென இந்த உறிஞ்சும் துவாரங்களை ஏற்படுத்த வேண்டும்

2, சுமார் 10 cm அகலம் மற்றும் 80-100 cm ஆழம் இருக்குமாறு துவாரங்கள் தோண்ட வேண்டும்
ஜாவாவில் இதற்கு ஸ்பெஷல் உபகரணம் பயன்படுத்துகிறார்கள் .
நாம் கடப்பாரை போன்றதைபயன்படுதினால் போதும் .

3,வாகன தரிப்பிடம் ,கட்டிடங்களின் பின்புறம்/நீர்பாசன வசதியற்ற எந்த இடத்திலும் இவ்வாறான துவாரங்கள் ஏற்படுத்தலாம் .
,
இதுவாரங்களில் இயற்கை,உயிர்கழிவுகலான காய்ந்த இலை ,அழுகிய பழங்கள் (compost )ஆகியவற்றை நிரப்பிமூட வேண்டும் ..
இவை மழை இல்லாத நாட்களில் உரமாக எடுத்து பயன்படுத்தலாம் .

இதுவாரங்களில் எறும்புகள் ,மண்புழுக்கள் இன்னபிற நுண்ணியிரிகள் தாமாக வளர்ந்து நிலத்தடியை வளப்படுத்தும் ..இதனால் நீர் வேகமா நிலத்தில் உறிஞ்சப்படும்
.
.இந்த துவாரங்கள் ஏற்படுத்தும்போது முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டியது

மேற்புறம் 10 cm ஆக இருப்பதால் கண்டிப்பாக மேற்புரத்தை கம்பி வலையால் மூடி பாதுகாக்கவேண்டும் .இலை ,காய்ந்த சருகுகளால்,மற்றும் organic கழிவுகளால் நிரப்பிகொண்டேய்ருக்க வேண்டும்

சிறு உயிரினங்கலான அணில்கள் ,பறவைகள் இதில் விழ இடம் கொடுக்க கூடாது .

சிறிய கடப்பாரை போன்ற உபகரணம் போதும் 80-100 செ .மீ அளவு துவாரம் தோண்ட ..

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது ..இந்த துவாரத்தில் இலை மற்றும் இயற்கை
கழிவுகள் மட்டுமே செல்லுமாறு பார்க்க வேண்டும் ...
பிளாஸ்டிக் ,சிகரெட் பில்டர் ஆகிய காலத்தால் அழிக்க முடியாதவை இங்கு சேர்ந்தால்
இந்த துவாரத்தால் ஒரு பயனும் இல்லை 
இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும் என வழிகாட்டுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா துரைசாமி.

இந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை பயன்படுத்திவீட்டிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நார்வே சென்றிருந்தபோது பார்த்தேன். வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் ஆலோசனை பெற்று, “ மண் இல்லாத வீட்டுத்தோட்டம் “ என்ற முறையை செயல்படுத்த தீவிரமானேன். எனது தந்தை ராமசாமி, தாய், சகோதரர் ஒத்துழைப்பு அளித்தனர்.

தென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்கென பிரத்யேக பையில் போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் முறையை துவக்கினேன். கத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.
இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி, வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுப் பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை மிச்சமாகும். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த எந்ததெந்த காய்கறி, எந்தெந்த வாசனை பயிர், மூலிகை பயிர், கீரை வேண்டும் என கேட்கிறார்களோ அந்த பயிரின் விதை போட்ட பை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை வழங்குவோம்.
தங்களது இடத்தில், தாங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை, தாங்களே சுகாதார முறையில் விளைவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சித்ரா துரைசாமிகூறினார். இயற்கை விவசாயம் முறையில் பசுமை குடில் அமைத்து காய்கறி விளைவிக்கும் விதை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தற்போது கோவை அருகே பாப்பம்பட்டியில் ஒரு தனி நிறுவனத்தையே நடத்தி வருகிறார்.

ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் வீட்டில் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்ய மொத்தம் 15 பைகள் (ஒரு பயிருக்கு ஒரு பை) வாங்கினால் போதும். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். தங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உற்பத்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நன்றி ..தினகரன் நாளிதழ் .