திங்கள், 28 ஜனவரி, 2013



கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல்[1] ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச்சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் குறிக்கும். மேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ மேற்கொள்ளப்படுகிறது. வள ஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பதற்கும் கழிவுப்பொருள் நிருவாகம் தேவை. கழிவுப்பொருள் நிருவாகத்தில் தின்ம, நீர்ம, வளிம கழிவுகளையும் சில வேளைகளில் கதிரியக்க பொருட்களையும் கையாள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். ஒவ்வொருவகை கழிவுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட முறைகளை அதற்கான வல்லுனர்களின் உதவியுடன் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

கழிவு மேலாண்மை முறைகள் மேம்பாடு அடைந்த நாடுகள், மேம்பாடு அடைந்து வரும் நாடுகள், நகர்ப்புறம், கிராமப்புறம், குடியிருப்பு இடங்கள் மற்றும் தொழிலகங்கள் போன்ற ஒவ்வொரு நிலையிலும் வேறுபடும். நகரப்புறங்களில், இடர் விளையாத குடியிருப்பு மற்றும் அலுவலகக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியினுடையதாகும். மற்றும் இடர் விளையாத வணிக, வணிகரீதியிலான மற்றும் தொழில்நிறுவனங்களில் இருந்து வெளிப்படும் கழிவுப்பொருட்களை தகுந்த முறையில் மீட்டு அகற்ற அவற்றின் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.