திங்கள், 6 ஜூன், 2016

www.reesales.com coming soooooooon.

Our Kuppavandi.com Next project is
"www.Reesales.com " Coming Soon...

திரு லேணா தமிழ்வாணன் speech at NEWS 7 channel


நமது Kuppavandi.Com மற்றும் அதன் பணியின் சிறப்பினை பற்றி Motivational Speaker ஐயா லேணா தமிழ்வாணன் அவர்கள் News 7 Channel ல் "தீர்வுகள்" என்ற நிகழ்சியில் கடந்த 20/5/216 அன்று பேசிய வீடீயோ பதிவு...
நன்றி : திரு லேணா தமிழ்வாணன், News 7 Channel

சனி, 7 நவம்பர், 2015

நமது kuppavandi.com பற்றி தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சிறப்பு வீடியோ தொகுப்பு

நமது kuppavandi.com பற்றி தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சிறப்பு வீடியோ தொகுப்பு...

வேலையுள்ள_பட்டதாரிகள்_சிறப்பு_தொகுப்பு

வீடியோவை பார்க்க இங்கு சொடுக்கவும் :


LINK : https://www.youtube.com/watch?v=UP4f3gnRki0

வியாழன், 8 அக்டோபர், 2015

தினமலர்

நமது Kuppavandi.com பற்றி தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி..

LINK  : http://www.dinamalar.com/news_detail.asp?id=1342614






குப்பைவண்டி டாட் காம் நடத்தும் எம்பிஏ பட்டதாரிகள்

சந்திரகுமார்

திருச்சியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி,படித்து முடித்துவிட்டு பல இடங்களில் பல ஊர்களில் வேலை பார்த்தாலும் இவருக்குள் ஒரு நிம்மதியின்மையும் பணியில் ஒரு நிரந்தர தன்மையும் இல்லாமல் இருந்தது.

இதே சஞ்சல மனதுடன் இனியும் இருக்கக்கூடாது சொந்தமாக ஏதாவது தொழில் துவங்கலாம் என எண்ணியபோது இவரைப்போலவே எண்ணங்களும், எம்பிஏ பட்டங்களும் கொண்டிருந்த காமராஜ் மற்றம் சதீஷ்குமார் ஆகியோர் இவருடன் இணைந்தனர்.


சந்திரகுமார் சிறுவயதில் வீடுவீடாக பேப்பர் போட்டு வந்த வருமானத்தில் கல்வி கற்றவர் பேப்பர் போடும் வீட்டில் அவ்வப்போது பழைய பேப்பரை எடுத்துக்கிறீயப்பா? என்று சொல்வார்கள்.

அப்போது அது அவருக்கு தேவைப்படவில்லை ஆனால் இப்போது அந்த நினைவு வர வீடுவீடாக பழைய பேப்பர் வாங்கி விற்போம் என்று முடிவு செய்தனர்.அதை நவீன பாணியில் செய்வது என முடிவு செய்து இணையத்தில் www.kuppavandi.com என்ற தனி வலைத்தளத்தை உருவாக்கினர்.

இந்த வலைத்தளத்தில் திருச்சியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்பதை பதிவு செய்துவிட்டால் இவர்கள் அந்த நேரத்தை உறுதி செய்து கொண்டு போய் பழைய பேப்பரை வாங்கிக்கொண்டு வந்துவிடுவர்.

ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இல்லை சனி,ஞாயிறு மட்டும் ஒன்றிரண்டு அழைப்புவரும் ஆனால் மனதை தளரவிடாமல் உழைத்தார்கள்.கடந்த 2012ல் துவங்கப்பட்ட இந்த குப்பைவண்டி.காம் இப்போது வேகம் எடுத்து ஒடுகிறது.

ஏதோ பேப்பர் எடுக்க வர்ர பசங்க என்று ஆரம்பத்தில் நினைத்தவர்கள், இவர்களது பின்புலம் தெரிந்த பிறகு இப்போதெல்லாம் வீட்டினுள் உட்காரவைத்து காபி,டீ,ஜீஸ் கொடுத்து உபசரிக்கின்றனர்.

பழைய பேப்பர் மட்டும் என்றில்லாமல் வீட்டில் உள்ள பால்கவர்,மின்சார சாதனங்கள்,உபயோகமில்லாத பர்னிச்சர்கள்,துணிகள் என்று வேண்டாத பழைய பொருட்கள் எது என்றாலும் வாங்கிக்கொண்டு அதற்குரிய விலையை கொடுத்து ரசீதும் கொடுத்துவிடுகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்று பிரித்துக்கொண்டு பத்தில் இருந்து பதினைந்து வீடுகளுக்கு செல்கின்றனர் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சேகரிப்பு வேலை மாலை 6 மணிக்கு முடிகிறது.

மாலை 6 மணிக்கு மேல் சேகரித்ததை தங்களது கிட்டங்கியில் கொண்டுவந்து தரம்பிரிக்கின்றனர் பின்னர் அதை தேவையானவர்களுக்கு விற்றுவிடுகின்றனர்.

நீலக்கலர் டிசர்ட் யூனிபார்ம் மற்றும் அடையாள அட்டையுடன் மினிலாரியில் போய் இறங்கினால் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து பிரித்து பில் போட்டு பணம் கொடுத்துவிட்டு பொருட்களை சேகரித்துக்கொண்டு அடுத்து அழைத்த வீட்டிற்கு செல்கின்றனர்.

இவர்களது அணுகுமுறை தொழிலில் உள்ள நேர்மை காரணமாக ஒரு முறை இவர்களிடம் வாடிக்கையாளராகிவிட்ட வீட்டுக்காரர்கள் பின்னர் பலமுறை அழைத்து அவ்வப்போது தங்களிடம் வேண்டாத பொருட்களை கொடுத்துவருகின்றனர் அதைவிட பெரிய விஷயம் பலருக்கு இவர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

தங்களிடம் சேரும் பிளாஸ்டிக் டப்பா போன்ற பொருட்களில் செடிகள் வளர்த்து வாடிக்கையாளர்கள் வீட்டில் இலவசமாக கொடுத்து மரம் வளர்க்க ஊக்கப்படுத்துவது தொழிலுக்கு நடுவில் இவர்கள் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவையாகும்.

எம்பிஏ படித்துவிட்டு இப்படி குப்பை அள்ளுற வேலையை ஏன் செய்யணும் என்று கேட்டவர்களும், கிண்டல் செய்தவர்களும் நிறைய பேர், ஆனால் அப்படி சொன்னவர்கள் யாரும் எங்களுக்கு வேலையும் தரப்போவது இல்லை, சோறு போடப்போவதும் இல்லை, அறிவை வளர்த்துக்கொள்ள படித்தோம்,படித்த படிப்பு கொடுத்த அறிவை இப்போது இந்த தொழிலில் பயன்படுத்துகிறோம்.

நாங்கள் வேலை இல்லாமல் இருந்தது ஒரு காலம் இப்போது நாங்கள் நாமக்கல்,கோவை போன்ற ஊர்களில் எங்களது குப்பைவண்டி டாட்காமை துவங்கி நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தர இருக்கிறோம்.

இன்னோரு உண்மையையும் நாங்கள் இங்கே சொல்லியாகவேண்டும் நாங்கள் எம்பிஏ படிப்பிற்காக வேலை பார்த்தபோது கடைசியாக என்ன சம்பளம் வாங்கினோமோ அதைவிட அதிகமாகவே இப்போது சம்பாதிக்கிறோம் என்றனர் பெருமையோடு.

எந்த தொழிலாக இருந்தாலும் அதை நேசித்து செய்தால் நிச்சயம் உயர்வுதான் இனிமேல் நாங்கள் வேலை கிடைத்தாலும் போகமாட்டோம் இந்த குப்பைவண்டி டாட்காமை எப்படி எல்லாம் மேல எடுத்து செல்வது என்பதில்தான் எங்கள் எண்ணம் இருக்கிறது என்றனர்.

கடுமையாக உழைக்கும் இந்த நண்பர்கள் மூன்று பேர்களும் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் கிட்டங்கி வாடகைக்கும்,மினி லாரி வாடகைக்கும் கொடுத்துவருகின்றர், அந்த பணம் மிஞ்சினால் இவர்களது வாழ்க்கை இன்னும் பிரகாசிக்கும்.

ஆகவே திருச்சி பகுதியில் உள்ள தினமலர்.காம் வாசகர்கள் உங்களிடம் உள்ள எலக்ட்ரானிக் உள்ளீட்ட வேண்டாத பொருட்களை இவர்களை அழைத்து கொடுக்கலாம்,இதை படிக்கும் திருச்சி பாங்க் அதிகாரிகள் இவர்கள் சொந்தமாக மினி லாரிவாங்க உதவலாம், கிட்டங்கி வைத்திருப்பவர்கள் குறைந்த வாடகை அல்லது குத்தகைக்கு கொடுத்து உதவலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக படித்த இளைஞர்கள் ஒயிட் காலர் வேலைதான் வேண்டும் என்று தேடாமல் பொழுதை தேய்க்காமல் எந்த தொழிலை செய்தாலும் அதில் நேர்மையையும் நேர்த்தியையும் காண்பித்துவிட்டால் படிப்படியாக முன்னேற்றம்தான் என்பதற்கான அடையாளம் இவர்கள்.இவர்களை வாழ்த்துவதற்கும் தொடர்புகொள்வதற்குமான எண்கள்: 9043107007,9043169966.

படம்,தகவல் உதவி:திருச்சி மணிகண்டன்.

எல்.முருகராஜ்.

தி இந்து தமிழ்

நமது Kuppavandi.com பற்றி தி இந்து தமிழ்  நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி

LINK :  http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7440503.ece




குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்


வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே 'குப்பவண்டி டாட் காம்' என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள்.
வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட் கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக இருக்கிறது 'குப்பவண்டி டாட் காம்'. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த சந்திரகுமார், காமராஜ், சசிகுமார், சதீஸ்குமார் ஆகிய நண்பர்களின் வித்தியாசமான யோசனையில் உருவானது இது.
இவர்களின் முயற்சியில் 2012-ம் ஆண்டு சாதாரணமாக ஆரம் பிக்கப்பட்ட குப்பவண்டி டாட் காமில் இப்போது ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்கள். திருச்சியில் கே.கே. நகர், கருமண்டபம், தில்லைநகர், எ.புதூர் என ஏரியா வாரியாக தெருப் பெயர்கள், டாட் காமில் இருக்கின்றன. என்ன விலைக்கு பழைய பொருட்களை வாங்குகிறார் கள் என்ற விலைப் பட்டியல் மற்றும் குறிப்பிட்ட ஏரியாவுக்கு குப்பவண்டி வரும் கிழமை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
திருச்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள குப்பவண்டி டாட் காம் குறித்து 'தி இந்து'விடம் சந்திரகுமார் கூறியதாவது:
''நியூஸ் பேப்பர் போடுவது உள்ளிட்ட பகுதிநேர வேலை பார்த்து அதன் மூலம் படித்தவன் நான். அப்போது பழைய பேப்பரை எடைக்கு போட்டு கொடுக்கும் படி பலர் என்னிடம் தருவார்கள். அப்படிதான் இந்த ஐடியா எனக்கு வந்தது. நண்பர்களிடம் இது குறித்து தெரிவிக்க, குப்பவண்டி டாட் காம் உருவானது. ஆரம்பித்தபோது மக்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் சனி, ஞாயிறு மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை சேகரித்து வருவோம். மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்றுவிடுவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் இணைய தள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும், எங்களிடம் ஒரு முறை வாடிக்கையாளராக பயனடைந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகம் செய்து வைத்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குப்பவண்டி டாட் காம் திருச்சி மக்களிடையே பிரபலமானது. தற்போது பார்த்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.
திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஏரியாவுக்கு குப்பை வண்டியை எடுத்துச் செல்கிறோம். இப்போது சரக்கு ஆட்டோவில் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது தவிர திருச்சியில் 2 இடங்களில் கிடங்கு கள் உள்ளன.
எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளாஸ் டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்'' என்றார்.
இணையதள முகவரி http://kuppavandi.com/
Keywords: குப்பவண்டி, குப்பவண்டி டாட் காம், தூய்மைத் திட்டம், கழிவுகள், பழைய பொருட்கள்


காலைகதிர்

நமது Kuppavandi.com பற்றி காலைகதிர் நாளிதழி
ல் வெளிவந்துள்ள செய்தி

TIMES OF INDIA

நமது Kuppavandi.com பற்றி TIMES OF INDIA நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி

நாள் : 7-JUL-2015

LINK : http://timesofindia.indiatimes.com/city/trichy/MBA-graduates-start-online-scrap-collecting-service/articleshow/47965418.cms

MBA graduates start online scrap collecting service

TRICHY: As collecting scrap has become a lucrative business, four 30-year-old MBA graduates along with a couple of people have ventured into an online junk collecting service called Kuppavandi.com.

People who want to get rid of the trash can register on their website. A team of five is involved in collecting the trash from the users who register their requests online.

The idea to start Kuppavandi.com evolved in 2012 and it was established in 2013. The user-friendly website hosts attractive content to persuade its visitors to make money by throwing out junk like old newspaper, milk covers, broken things and plastic wastes, right at their doorstep.

The service is offered to both individuals and organisations. Apart from collecting scrap, the team offers services like electrical assistance, plumbing and carpentry.

The four - M Chandrakumar, B Sasikumar, S Sathish Kumar and S Kamaraj - hit on the idea of getting into scrap collection business when they met in Chennai.

Kamaraj said though it was difficult to collect funds initially, things started shaping up when the business plan started paying off a few months back.

He added that nowadays, as residents are finding it difficult to sell their old house wares at shops, the idea of picking the scrap at the doorstep has developed.

However, winning the people's trust was quite a task for the team. Sathish Kumar said it was difficult during the start as residents were quite apprehensive about the idea.

The scrap is collected using a small pickup vehicle and loaded at the city's warehouse. From there, it is later dropped at the respective points.